தமிழகத்தில் நாளை முதல் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு 11 மணி முதல் 12 மணி வரையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, சூளைமேடு, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்று வடபழனி, சாலிகிராமம், அசோக்நகர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், தியாகராய நகர் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கோடைக்காலத்தை போல் வெயில் வெளுத்து வாங்குகிறது. இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, தென்காசியில் சில இடங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் ஜூன் 28 ல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரகை்கால...