ஷாக்கிங் நியூஸ் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது..!
ஷாக்கிங் நியூஸ் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது..! சென்னையில் பரனூர், சூரப்பட்டு, சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. ஏப்ரல் 1ம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டண உயர்வு கட்டணம் உயர்கிறது என மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கோரிக்கை சென்னையில் பரனூர், சூரப்பட்டு, சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிக் கட்கரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மாநில அரசு விடுத்திருந்த கோரிக்கை பட்டியலில் உள்ள சூரப்பட்டு மற்றும் வானகரம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்து மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45 ஆக...