ராணியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்.. வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த போஸ்டர்414955332
ராணியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்.. வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த போஸ்டர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரலாற்று காவியமான இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கேரக்டர்கள் குறித்த போஸ்டரை பட குழு தற்போது அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பொன்னியின் செல்வன் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் கார்த்தியின் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன் போஸ்டர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அதைத்தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது. தற்போது லைகா நிறுவனம் அந்த போஸ்டரை வெளியிட்டு பழிவாங்கும் முகம் அழகானது, பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும் என்று ட்வீட் செய்துள்ளது. அதில் ஐஸ்வர்யா ராய் ப...