Posts

Showing posts with the label #Letter | #Ex | #Ministers | #DGPs

குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்1189312666

Image
குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.   இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேரிடம் குட்கா வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்படும் பதிலின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் ச...