Dikshitars protest against Sami darshan by devotees climbing on Kanakasabai - Advised to hold legal battle-1768624111
கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு - சட்ட போராட்டம் நடத்த ஆலோசனை சென்னை: தமிழக அரசின் உத்தரவினை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஏராளமான பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்டப்போராட்டம் நடத்த ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். தமிழக அரசு அரசாணை அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம்...