மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா - உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்463607508
மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா - உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் கலந்து கொண்டிருக்கின்றனர். தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால், இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இறுதிப் போட்டி இன்று நடந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு இந்தியா சார்பில் அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்) பதக்கம் வென்றிருக்கிறார். வேறு யாரும் பதக்கம் வென்றதில்லை. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியிலும் நீரஜ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் காரணமாக நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்ஸை போன்று மீண்டும் ஒரு சாதனையை படைப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். முதல...