இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்1557796719
இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம் அவரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த இவர் அடுத்ததாக மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக விஜய்யின் தலைவா படத்தை இயக்கியபோது, அப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அமலாபால் மீது காதல் வயப்பட்டார் விஜய். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு நடிகை அமலா பாலை விவாகரத்து செய்து பிரிந்தார் விஜய். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ஏ.எல்.விஜய். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைய...