2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்
2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள் திருச்சி: சசிகலா 2 நாள் பயணமாக இன்று தஞ்சை செல்கிறார். அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்யும் அவர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார். ஆனால், கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர், அதிமுக நிர்வாகிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்தார். இதேபோல், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்தவகையில், கடந்த 4ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு கோயில்களில் சாமி தரிசனம் செய்து, தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சசிகலாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்து பேசினா...