முதல்வர் ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மூன்று நாள் பயணம்734358803
முதல்வர் ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மூன்று நாள் பயணம் திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டைஆகிய மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்இன்று புறப்படுகிறார். ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் வகையில், அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு போக்குவரத்து கழக சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் துரோகத்தின் அடையாளம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அடுத்த மாதம் 11-ம் தேதி கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் 2,432 பேர் ஆதரவு அளித்துள்ளதாக தகவல். அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையே ...