முதல்வர் ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மூன்று நாள் பயணம்734358803


முதல்வர் ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மூன்று நாள் பயணம்


திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டைஆகிய மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்இன்று புறப்படுகிறார்.

ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் வகையில், அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு போக்குவரத்து கழக சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் துரோகத்தின் அடையாளம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அடுத்த மாதம் 11-ம் தேதி கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் 2,432 பேர் ஆதரவு அளித்துள்ளதாக தகவல்.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையே சரியானதாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 1,461 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நாளை முதல் 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க சென்ற நரிக்குறவ இன மக்களை, இருக்கைகள் இருந்தும் தரையில் அமர வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை உதயநிதி ஸ்டாலின் திருடிச் சென்றதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை சிறுவாணி பகுதியில் ஒற்றை யானை தாக்கி சிறுவாணி சுத்திகரிப்பு நிலைய ஊழியர் உயிரிழந்தார்.

சென்னையில் மின்சார பைக்குகளை ஏற்றிவந்த லாரியில் ஏற்பட்ட தீயை, தீயணைப்புப் படையினர் போராடி அணைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.

பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்திற்காக வீட்டில் உள்ள தங்க நகைளை அடமானம் வைப்பது போய் விற்பனை செய்வது அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை அடுத்த மாதம் 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை.

மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம், சண்டிகரில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ள உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் அடுத்த மாத இறுதியில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த பிரபல நடிகர் "பூ" ராமு, மாரடைப்பால் திடீர் மரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் நடைபெறும் இயற்கை வேளாண்மை புரட்சியை வல்லுநர்கள் ஆய்வுசெய்யலாம் என்று ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைனில் வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 59 பேர் காயமடைந்தனர்.

வரும் 10ம் தேதிவரை அத்தியாவசியத் துறை பணியாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Must Read : 11ம் தேதி கூட்டப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமானது - ஓபிஎஸ்

ஜோர்டான் நாட்டின் அகாபா (AQABA) பகுதியில், டேங்கரை தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, விஷவாயு வெளியேறியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அயர்லாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் நிலையில், தனது தலைமையில் முதல்முறையாக தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஹர்திக் பாண்டியா ஈடுபட்டுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சாம்பியனான ஜோகோவிச், முதல் சுற்றில் சற்று போராடி வெற்றிபெற்றார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Comments

Popular posts from this blog

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition