Posts

Showing posts with the label #Vaigai | #Thief | #Families | #Victims

வைகை ஆற்றில் கள்ளழகர் நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

Image
வைகை ஆற்றில் கள்ளழகர் நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் அவரை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக இரண்டு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள் என்றும் 5 பக்தர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் மதுரை வைகையாற்றில் நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி குறித்த அறிவிப்பை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ளார் . நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பக்தர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி செய்யப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.