மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்...956366984
மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்... சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாநாடு படம் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 25 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே படம் செம வரவேற்பை பெற்றது. தமிழில் எடுக்கப்பட்டாலும் மொத்தம் 5 மொழிகளில் மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். எஸ்.ஜே.சூர்யா பேசும், வந்தான்...சுட்டான்...செத்தான்...ரிப்பீட்டு என்ற டயலாக் செம ஃபேமஸ் ஆனது. முதல் நாளே மாநாடு படம் ரூ.9 கோடிகளை வசூல் செய்தது. முதலில் சில நாட்கள் வசூலை அறிவித்து வந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிறகு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தனக்கு சரியான கணக்கை ஒப்படைக்காததால் படத்தில் வசூலை தன்னால் அறிவிக்க முடியவில்லை என வேதனையாக ட்வீட் போட்டார். அதற்கு பிறகு வசூலை பற்றி அவர் எந்த தகவலும் சொல்லவில்லை. முதல் வாரத்திலேயே 50 கோடி வசூலை கடந்த மாநாடு படம், 25வது நாளில் 100 கோடி வசூலை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. சிம்புவின் முதல் 100 கோடி வசூல் படம் இது தான். பிறகு...