தென்தமிழகம், மேற்குத்தொடர்ச்சி : இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்தமிழகம், மேற்குத்தொடர்ச்சி : இன்று கனமழைக்கு வாய்ப்பு ஏப்ரல் 7-ந் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று தென்தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் தென் தமிழகம், புதுகை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏப்.,6, 7-ல் அந்தமான், வங்கக்கடல் பகுதியில் 60 கிமீ வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரித்துள்ளது.