Meena: மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
Meena: மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
நடிகை மீனா
பிரபல நடிகையான மீனா தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர். தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா, கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார்.
Meena: மீனாவின் கணவர் மரணத்திற்கு காரணம் புறாவின் எச்சமா? வெளியான பகீர் தகவல்!
நுரையீரல் தொற்று
இவர்களின் மகள் நைனிகாவும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் நேற்று இரவு திடீரென மரணமடைந்தார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Meena: இதயம் நொறுங்கிவிட்டது... வாழ்க்கை கொடுமையானது... குஷ்பு உருக்கம்!
பிரபலங்கள் அஞ்சலி
அவரது மறைவு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் குஷ்பு, சரத்குமார், பிரபு தேவா, நிழல்கள் ரவி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வித்யாசாகரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Meena: வித்யாசாகர் மறைவுக்கு காரணம் இதுதான்... யாருமே எதிர்பார்க்கல... டான்ஸ் மாஸ்டர் கலா திடுக்!
ரஜினிகாந்த் அஞ்சலி
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் நடிகை மீனாவுக்கும் ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட சில படங்களில் நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
Meena: தவறான தகவலை பரப்பி பயமுறுத்தாதீர்கள்... கடுப்பான பிரபல நடிகை!
ஜோடியாக
மேலும் எஜமான், முத்து, வீரா, அண்ணாத்த உட்பட பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். காலையிலேயே போனில் தொடர்பு கொண்டு மீனாவுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் நேரில் சென்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Comments
Post a Comment