மன்மதலீலை டைட்டில் பிரச்சனை… சிக்கலில் வெங்கட்பிரபு!
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், சென்னை திருவான்மியூர் சேர்ந்த கவிதா என்பவர் சென்னை 19வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அசோக் செல்வன் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள மன்மதலீலை என்ற திரைப்படத்தின் தலைப்பு தங்களுடையது என்றும், தனது தந்தை பி.ஆர். கோவிந்தராஜன் மற்றும் தாயார்... விரிவாக படிக்க >>