யுவனுடன் அண்ணன் செல்வராகவன்... 'நானே வருவேன்' குறித்து தனுஷ் கொடுத்த அப்டேட்1223152961


யுவனுடன் அண்ணன் செல்வராகவன்... 'நானே வருவேன்' குறித்து தனுஷ் கொடுத்த அப்டேட்


'நானே வருவேன்' பின்னணி இசை குறித்து இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

 

 செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘நானே வருவேன்’. ஏற்கனவே இந்த கூட்டணியில் சூப்பர் ஹிட் படங்கள் வெளியான நிலையில் மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இந்துஜா, யோகிபாபு, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லிஅவ்ர்ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 

 

இந்த படத்தை வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசைக்கோர்வை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் யுவனுடன் செல்வராகவன் பிசியாக பணியாற்றும் புகைப்படத்தை இணைத்துள்ளார். 

 

 

Comments

Popular posts from this blog

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்