அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!954940679

அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், உள்பட 11 பேர் கழக அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, அதிமுக நிர்வாகிகள் பற்றிய பொன்னையன் பேசிய ஆடியோ வைரலான நிலையில், அது தனது குரல் அல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன் விடுவிக்கப்பட்டு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment