ரொம்ப கெட்ட வார்த்தையிலே பேசுறாங்க..சினேகனிடம் சொன்ன கன்னிகா!


ரொம்ப கெட்ட வார்த்தையிலே பேசுறாங்க..சினேகனிடம் சொன்ன கன்னிகா!


சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ரியாலிட்டி ஷோக்களில் முதன்மையானது ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ். கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கிய பிக்பாஸ் ஷோவின் 5 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது போக பிக்பாஸின் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 ஷோவும் இந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது. மெகாஹிட் ஷோவின் சேனல் வெர்ஷன் மற்றும் OTT வெர்ஷன் ஆகிய இரண்டின் முதல் சீசன்களிலும் கலந்து கொண்டவர் பிரபல சினிமா பாடலாசிரியரான சினேகன்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2000-க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளார் சினேகன். கவிஞர் சினேகன் ஒரு பாடலாசிரியராக மட்டுமில்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். பிக்பாஸ் ஷோவில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமான சினேகன், உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்தார். தற்போது அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.

இதையும் படிங்க.. ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?

2019 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும் மற்றும் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் சினேகனுக்கும் - டிவி நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் அவர் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடந்தது.

இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பதால், திருமணத்திற்கு முன்பே ஒருவர் மீது ஒருவர் அன்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் இவர்களிடையே அன்னியோனியம் அதிகரித்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் கவிஞர் சினேகன், தன் மனைவி கன்னிகாவின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டார். இது தொடர்பான வீடியோ அப்போது சோஷியல் மீடியாக்களில் படு வைரலானது.

அதே போல சினேகன் பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோவில் பங்கேற்க சென்ற போது புதுமண தம்பதிகள் முதன் முறையாக பிரிகிறார்கள் என்கிற ரீதியில் செய்தி வைரலானது. எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கன்னிகா, சினேகனின் பாடல்கள் , தான் வரைந்த படங்கள் , மேஜிக் செய்வது என பல வீடியோக்களை அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.

இதையும் படிங்க.. விஜய் டிவி சீரியலால் சூர்யா படத்திற்கு வந்த சோதனை.. கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!

இந்நிலையில் சமீபத்தில் கன்னிகா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. கணவன் சினேகனிடம் தான் வரைந்த ஓவியம் ஒன்றை காட்டி இது எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் சினேகன் உன்னி மாதிரியே மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறி மனைவியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.


 




View this post on Instagram






 

உடனே இதற்கு ரியாக்ட் செய்யும் கன்னிகா, இப்படி எல்லாம் முத்தம் கொடுக்காதீங்க, இது போன்ற வீடியோக்களை இனி போட கூடாதுன்னு இருக்கேன். போட்டா ரொம்ப கெட்ட வார்த்தையிலே பேசுறாய்ங்க.. கட்டு கட்டு"என்று கூறி வீடியோவை கட் செய்வதோடு இந்த வீடியோ முடிகிறது. திட்டுகிறார்கள் என்று தெரிந்து கொண்டே இந்த முத்தம் கொடுக்கும் வீடியோவை ஷேர் செய்து இருக்குறீங்க, ரொம்ப தைரியம் தான் என்று சில யூஸர்கள் வேடிக்கையாக கமெண்ட்ஸ் செய்து இருக்க, பல யூஸர்கள் எப்போதும் போல உங்க வீடியோவை போடுங்க பார்த்து ரசிக்க நாங்க இருக்கோம் என்று கூறி இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition