அதுக்குள்ள 2வது திருமணம், 12 வருஷம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்: இமானின் மாஜி மனைவி குமுறல்


அதுக்குள்ள 2வது திருமணம், 12 வருஷம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்: இமானின் மாஜி மனைவி குமுறல்


மோனிகா ரிச்சர்டை திருமணம் செய்து 13 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார் இசையமைப்பாளர் டி. இமான். இதையடுத்து மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலியை மறுமணம் செய்துள்ளார்.
எமிலியை மறுமணம் செய்த டி.இமான்: அடடே, அந்த பிரபலத்தின் மகளா இவர்!புது மாப்பிள்ளை இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இமானுக்கும், மோனிகாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் விவாகரத்து கிடைத்தது. இதையடுத்து மே மாதம் 15ம் தேதி இமான் மறுமணம் செய்து கொண்டதை தான் மோனிகா இப்படி கூறியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog