அச்சுறுத்தும் கொரோனா - கலெக்டர்களுக்கு சுகாதார செயலர் அவசர கடிதம்!


அச்சுறுத்தும் கொரோனா - கலெக்டர்களுக்கு சுகாதார செயலர் அவசர கடிதம்!


சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் தற்போது சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக படிப்படியாக மாறி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் என மொத்தம் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். தமிழக முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு - முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு?
வட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition