ஆசையாக சாப்பிட்ட மாணவிக்கு துடிதுடித்து பலியான சோகம்..! பரோட்டா சாப்பிட்டதில் இளம் பெண் கேரளாவில் மரணமடைந்துள்ளார். திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் பரோட்டா சாப்பிட்டதால் பிளஸ் 1 மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. பரோட்டா உடல்நலனுக்குக் கெடு என்று தெரிந்தும் கூட பலரும் அதைத் தொடர்ந்து சாப்பிடுவதாலேயே இதுபோன்ற சம்பங்கள் நடக்கின்றன. இங்கு மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகள் காரணமாகப் பலரது உடல்நிலையும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இவை நமக்கு நீரிழிவு தொடங்கிப் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையே மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், பெரும்பாலானோர் இதை கடைப்பிடிப்பது இல்லை. பரோட்டா இதன் காரணமாகப் பல நேரங்களில் நமக்குப் பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது.. பரோட்டா என்றாலே அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவுகளில் இரவு நேரங்களில் பரோட்டா தான் பிரதான உணவாக இகுக்கும். பரோட்டா சாப...