பிக்பாஸ் சீசன் 6 தமிழ்: பிரபலங்கள் மட்டுமில்லை; "உங்களிலிருந்தும் சிலர் விளையாட வராங்க" அக். 9 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார் கமல்ஹாசன். பின்னர், வழக்கம்போல் பிக் பாஸ் இல்லத்தை பார்வையாளர்களுக்கு சுற்றி காண்பிப்பார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்குவதற்கு முன்பே, போட்டியாளர்கள் குறித்த யூகங்கள் இணைய உலகில் வெளிவரத் தொடங்கிவிட்டன. நிச்சயமாக இவர்கள்தான் என சிலரின் பெயர்களை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், ஊகமாகவும் சிலரது பெயர்கள் வெளியாகி வருகின்றன. விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் 'டிடி' என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, 'மைனா' நந்தினி, 'குக் வித் கோமாளி' மூலம் புகழ்பெற்ற ரோஷினி, ரக்ஷன், தர்ஷன், பாடகி ராஜலட்சுமி உள்ளிட்ட பலரின் பெயர்களும் இந்த பட்டியலில் இருப்பதாக யூகங்கள் வெளியாகி வந்தாலும், யார் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரம் ஞாயிற்றுக்கிழமைதான் தெரியவரும் பிக்பாஸ் சீசன் 6இல் பார்வையாளர்களிலிருந்தும் சிலர் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. எனவே, பி...